


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆணங்கூர் கிராம பகுதியில் ரவிக்குமார், அன்புக்கொடி தம்பதியினர் வளத்தி வந்த ஆடுகளை இன்று அதிகாலை 6 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சேர்ந்து பட்டியிலிருந்த 16 ஆடுகளை கடித்ததில் எட்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு கழகச் செயலாளருமான தங்கமணி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் சம்பவம் நடைபெற காரணம் குறித்தும் கேட்டறிந்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ஆடுகள் இன்று பல்கி பெருகி 16 ஆடுகளாக வளர்த்தி வாழ்வாதாரம் நடத்தி வந்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். ஆடுகளை கடித்த நாய்கள் குழந்தைகளையோ மனிதர்களையோ கடிப்பதற்கு முன் அவைகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நிகழ்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். சரஸ்வதி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 நிதியுதவியை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

