• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

ByA.Tamilselvan

Jun 13, 2022

மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், 47வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் மாலையில் சிம்ம, அனுமான், கருட, சேஷ, யானை, தங்கச்சிவிகை, பூச்சப்பரம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
இந்த நிலையில் விழாவின் 9 ஆம் நாளான பிரமோற்சவத்தின் சிகர நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை தொடங்கிய தேரோட்டம் நிகழ்வானது,
கோவில் தேர்முட்டியில் இருந்து புறப்பட்டு தெற்கு வெளி வீதி வழியாக சென்று திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி வழியாக வந்து தேர்முட்டியை அடையும்.
மேலும் இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம்பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்