தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நாளை 3-10-25 தேதி பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.
அதில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகன் நிஷாந்த் ஆகியோரின் படங்களும் இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். குறிப்பாக பேனரில் உள்ள தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகன் நிஷாந்தின் புகைப்படமும் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் இது குறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் மற்றும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் இடையே பனிப்போர் இருந்து வரும் நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பிறந்தநாள் என்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் ஆண்டிப்பட்டி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.