• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தெலுங்கானா வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு..,

ByPrabhu Sekar

Feb 6, 2026

தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர் கலந்து கொண்ட நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தெலுங்கானா வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்திற்கு முன்பாக தாம்பரம் வேளச்சேரி சாலையில் உள்ள இருக்கும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரை தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில துணை முதல்வர் மல்லுப்பட்டி விக்ரமார்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்

பேரணியின் இறுதியில் தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தலைவர்கள் பேசினர்

அப்போது தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர் பேச ஆரம்பிக்கும் போது தெலுங்கானா வாழ்க என காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கோஷமிட்டார்.

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெலுங்கானா வாழ்க என கோஷமிட்டதால் கட்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.

பேரணியின் தொடக்கத்தில் ஐந்தாயத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் பொது கூட்டம் காலி இருக்கைகளுடன் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.