மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் விதை மசோதா மற்றும் 2025 மின்சார திருத்த மசோதா உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஐ, சிபிஐஎம் கட்சியினர் மற்றும் மக்கள் அதிகார அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

தொடர்ந்து மத்திய அரசின் விதை மசோதா மற்றும் மின்சார திருத்த மசோதா பட்ஜெட் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,




