• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை..,

ByP.Thangapandi

Jun 6, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்.,

அமித்ஷா வருகை அன்று திருச்சியில் நடைபெறும் கழக நிர்வாகி பாபு இல்ல திருமண விழாவிற்கு செல்ல தேதி கொடுத்துள்ளேன், அமித்ஷா வை சந்திப்பதா, இல்லையா என்பது குறித்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

அமித்ஷா அவர்கள் அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செயல்பட்டு, திமுக வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து அதை செய்து முடித்திருக்கிறார்.

இன்னும் பிற கட்சிகள், யாரெல்லாம் திமுகவை ஆட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், திமுகவிற்கு எதிராக செயல்படுகின்ற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவது மூலம் திமுகவை எதிர்க்கின்ற வாக்குகள் சிதறாமல், மாபெரும் வெற்றி பெற முடியும் என்பது தான் என் கோரிக்கை.

அரசியல்வாதிகள் பேசும் போது கர்நாடகவினர் அமைதியாக இருப்பார்கள், கமல் சிறந்த நடிகர், அவரே ஒரு படத்தில் நடித்து வெளியிடும் நேரத்தில், இது போன்ற கருத்துகளை அவர் சொல்லாமல் தவிர்த்திருந்தார் என்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், மற்றபடி அவர் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை.

தவெக வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை – என டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.