• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திராட்சை சாகுபடிக்கு போதிய வருவாய் இல்லை..,விவசாயிகள் வேதனை..!

Byவிஷா

Apr 28, 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் திராட்சைப் பழங்களுக்கு போதிய வருவாய் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியை கடந்த உடன் நெடுஞ்சாலையில் இருபுறமும் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 4000 ஏக்கர் அளவிலான நிலத்தில் திராட்சைபழம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவ்வாறு சாகுபடி செய்யப்படும் திராட்சைபழங்கள் சிறுமலை அடிவாரப் பகுதியில் விளைவதால் மிகவும் சுவை மிக்கதாகவும், நீர்ச்சத்து அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையின் ஓரங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் திராட்சைபழங்களை பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், திராட்சைப்பழம் விளைவிக்கப்பட்டு சுமார் 12 மாதங்கள் முதல் 18 மாதம் வரை உரங்கள் பூச்சி மருந்து உள்ளிட்டவை தெளித்துமுறையாகபராமரித்து வளர்க்கப்படுகின்றன. மேலும், திராட்சைக்கொடி முழுமையாக வளர்ந்து பிஞ்சு காய்க்கும் தருவாயில் கவாத்து வெட்டியபிறகு, நான்கு மாதத்தில்திராட்சைபழங்கள்விற்பனைக்குதயார் ஆகிவிடும்.
இவ்வாறு விளைவிக்கப்படும் திராட்சை பழங்கள் கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 1,500 கிலோ முதல் ஏற்றுமதி செய்தும் போதிய வருவாய் இல்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.