கடந்த (மார்ச்_3)ம் தேதி.கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அய்யா வழி புத்தகம் வெளியீடு நிகழ்வில் அய்யா சாதனத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற கருத்து அபத்தமானது.
நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அய்யா வழி மக்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியே இத்தகைய பேச்சிற்கு காரணம்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கு பெற்ற இருவரின் நோக்கம் கொலை குற்றவாளி ஒருவர் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யும் தமிழக அரசின் கோப்பு ஆளுநர் வசம் உள்ளது. ஆளுநர் குறிப்பிட்ட அந்த கோப்பில் கையெழுத்து இடுவதற்கான முயற்சியே அந்த புத்தக வெளியீடு என குற்றம் சாட்டும் அய்யா வழி தலைமைப்பதி பொறுப்பாளரும், வழக்கறிஞருமான பலஜனாதிபதி தெரிவித்த தகவலுடன், ஆளுநர் ஆர்.என். ரவி. சுவாமி தோப்பு தலைமை பதிக்கு வந்த போது அய்யா வழியின் தோற்றம், இன்று வரை கட்டிக்காக்கப்படும் பண்பாடும் நெறிமுறைகளை ஆளுநரிடம் விளக்கமாக தெரிவித்தேன்.
ஆளுநர் பொது வெளியில் பேசும் போது, சானதனம் என்ற வார்த்தையை பயன் படுத்தவே இல்லை. வயது முதிர்ந்த 500_க்கும் அதிகமான ஆண், பெண் நபர்களுக்கு தினம் தலைமைப்பதியில் உணவு அளிப்பதை பாராட்டினார். இங்கு பின்பற்றப்படும் குரு முறையை பாராட்டினார் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
