• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாதனைக்கு வயது தடையில்லை..,
நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்த 70வயது மூதாட்டி..

Byவிஷா

Jun 28, 2022

‘சாதனைக்கு வயது ஒரு தடையில்லை’ என்று சொல்வார்கள். அதைப்போல, 70வயது மூதாட்டி ஒருவர் இருகைகளையும் கட்டிக் கொண்டு நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
கேரள மாநிலம் ஆலுவாவில் 70 வயது மூதாட்டி ஒருவர் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியபடி நீச்சலடித்து அசத்தியுள்ளார். வீ.கே. குன்னம் புரத்தை சேர்ந்தவர் ஆரிபா. நீச்சல் மீது அதிக ஆர்வமுள்ள இவர், முறையாக நீச்சல் பயின்றுள்ளார். கைகளை கயிறால் கட்டியபடி நீச்சல் பயிற்சி பெற்றுவந்த ஆரிபா, அதனை பொதுமக்கள் முன்னிலையில் செய்துகாட்டியுள்ளார். அதன்படி ஆலுவாவில் உள்ள பெரியாறு ஆற்றில் கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு 780 மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார். இவருடன் 11 வயது சிறுவனும், 38 வயது பெண்ணும் கலந்துகொண்டனர்.