தேனி மாவட்டம் கோம்பை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சிறுத்தை தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய நபர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆய்வு செய்ய வந்த வன காப்பாளரை மறைந்திருந்த சிறுத்தை திடீரென தாக்கியதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து சிறுத்தை தாக்கியதில் வன காப்பாளரின் தலையில் படுகாயம்ஏற்பட்டு சிகிச்சை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.