கம்பம் நகராட்சி சார்பில் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பல்வேறு வசதியுடன் பாலச்சந்தை கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில்
கம்பம் உழவர்சந்தையை சுற்றி ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க, உழவர் சந்தையை சுற்றியுள்ள சாலையோர வியபாரிகளை வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தைக்கு 10 நாட்களுக்குள் இடமாற்றம் செய்து கொள்ளவேண்டும் என நகராட்சி சார்பில் சாலையோர வியபாரிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதற்கு உழவர்சந்தையை சுற்றியுள்ள சாலையோர வியபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ கம்பம் நகர செயலாளர் மோகன் தலைமையில் நகராட்சி கமிஷனர் உமாசங்கரை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் கமிஷனரிடம் வியபாரிகள் கூறுகையில்,
கடந்த சில ஆண்டுகளாக கம்பம் உழவர்சந்தையை சுற்றி சுமார் 50 வியபாரிகள் சாலையோர கடைகள் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது திடிரென வாரசந்தைக்கு இடமாற்றம் செய்யும் போது எங்களது வாழ்வாதரம் பாதிக்கும், மேலும் உழவர்சந்தை இருப்பதால் மட்டுமே தங்களுக்கு வியபாரம் நடக்கிறது. வாரசந்தையில் உள்ள தினசரி சந்தைக்கு இடமாற்றம் செய்யும்போது அங்கு பொதுமக்கள் யாரும் வரமாட்டார்கள், நாள்தோறும் கடை வாடகை கூட கட்டுவதற்கு கூட வருமானம் இருக்காது எனவே இடமாற்றம் செய்வதை கைவிட்டு, உழவர்சந்தையை சுற்றியுள்ள வியபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு ஒழுங்குமுறை படுத்தி வியபாரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

அதற்கு கமிஷனர் பதில் கூறுகையில், அரசு உத்தரவின் பேரில் கம்பம் நகராட்சி பகுதியில் முக்கிய வீதிகளான உழவர்சந்தை ,பார்க்ரோடு, வேலப்பர் கோவில், பழைய பஸ்ஸ்டாண்ட், எல்.எப்.மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சாலையோர வியபாரிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தை தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்ட்டு வருகிறது.அதே சமயம் தங்களது கோரிக்கை மனு குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார். திடிரென மனு கொடுக்க வியபாரிகள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
