• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைக்கழிப்பு

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். மேலக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதன்மூலம் பயன் பெற்று வருகின்றன ர் கடந்த சில நாட்களாக இங்குள்ள மருத்துவ பணியாளர்கள் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி அலைக்கழிக்கப்படுவதாகவும் முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வருபவர்களை மருத்துவ பணியாளர்கள்.சிகிச்சை அளிக்க மறுத்து வருவதாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி காலையில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பப்படுவதாகவும் இதனால் கிராமத்தில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனியார் மருத்துவமனை நோக்கி அவர்கள் செல்ல மறைமுக ஆதரவாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட அலுவலர், தலைமை மருத்துவர் அலுவலர் நேரில் விசாரணை செய்து முறையாக சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் மேலும் மருந்து மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.