தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,145 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,51,19,008 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 34,13,248 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 38,024 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் 10-க்கும் குறைவான அளவே தொற்று உறுதியாகியுள்ளது. 19 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட தொற்று உறுதியாகவில்லை.தமிழ்நாட்டில் அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக உள்ளது. அதே போல 18 மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10-க்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.