• Thu. Jun 1st, 2023

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

Byமதி

Nov 29, 2021

ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் ரத்து செய்திருக்கின்றன. இந்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவிவிட கூடாது என்ற வகையில் கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *