கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் டிப்பர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கட்டுமான பொருட்கள் கிரஷர்களில் இருந்து எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறோம்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் ஜல்லி கிஷசர் உரிமையாளர் சங்கம் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி திடீரென பல மடங்கு விலை ஏற்றம் செய்தனர்.
கடந்த ஒரு ஆண்டுகளில் 3 முறை விளை யேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு 3000 இருந்து எம் சாண்டிற்கு ரூ. 4000, பி காண்ட் 5000 ரூபாயாகவும் மற்றும் ஜல்லிக்கற்கள் பலமடங்கு விலையேற்றம் செய்யப்பட்டது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாங்கள் கட்டுமான தொழிலுக்கு பொதுமக்களுக்கும் மற்றும் எங்களை சார்ந்த நிறுவனங்களுக்கும் கடந்த 19 தேதி முதல் கிரசர் சங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலவரையற்ற கிரசர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய போது அவர்கள் தேனி மாவட்டத்தில் கனிம வளத்துறை எங்களது கல் கல்குவாரிகளுக்கு 30 லட்சம் முதல் 2 கோடி வரை அபராத விதித்து உள்ளார்கள்.
மேலும் ஈபி கட்டண உயர்வு, அதிகரிக்கும் மாமுல் என பல்வேறு தேவைகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் விலையேற்றம் செய்துள்ளதாக சொல்கிறார்கள். எனவே நாங்களும் பொதுமக்களுக்கும் மற்றும் எங்கள் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்கிறது .
எனவே எங்களுடைய வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு விலைவேற்றத்தை தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் விலையேற்றம் செய்யும் போது சரியான முன்னறிவிப்பு செய்து விலையேற்றம் செய்ய வேண்டுமென தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.