• Fri. Jan 24th, 2025

தேனி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசியல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ByI.Sekar

Mar 7, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் நடைபெற்றது
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு 33.தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி, துணை வாக்குச்சாவடி அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல்கட்சி பிரதிநிதிகளுடன் வாக்கு சாவடி மறு சீரமைக்க உள்ள உத்தேச பட்டியல் வழங்கப்பட்டது.
மேலும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான தங்களது கருத்துகளை 11.03.2024-க்குள் அந்தந்த கோட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / கோட்டாட்சியர் எழுத்துபூர்வமாக அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி ஷீலா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.முத்துமாதவன் (பெரியகுளம்), திருமதி தாட்சாயினி (உத்தமபாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சாந்தி, தேர்தல் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.