தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை நிலையமான தேனி கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி பண்டிகை விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்

இந்த விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கைத்தறி, மற்றும் பட்டு சேலை ரகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், கைத்தறி சுங்கு சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி சட்டைகள் உள்ளிட்டவை இந்த விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழ்நாட்டின் நெசவாளர்கள் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட கைத்தறி துணிகளின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி வகை துணிகளுக்கு 30% தள்ளுபடி விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது
தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை 67 லட்சம் ரூபாய் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை 95 லட்சமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.