• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம்

Byதரணி

Jan 21, 2023

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் இன்று தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது .உற்ஸவர் சன்னதியில் அஸ்தரத்தேவர் எழுந்தருளினார். சிறப்பு பூஜை நடைபெற்றது.


உற்ஸவத்தின் போது அஸ்தரத்தேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆறுமுக சுவாமி சன்னதி முன் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து பொய்கை தண்ணீரில் உற்ஸவம் நடைபெற்றது.மலைக்கு பின்புறம் எழுந்தருளிய பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால திரிபுர சுந்தரி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்…