• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அழுகிய ஆகாய தாமரைகளால் அவலம், களத்தில் இறங்கிய இளைஞர்கள்..,

ByR. Vijay

May 2, 2025

நாகப்பட்டினம் மாவட்டம்  திருக்குவளை ஊராட்சி கீழ்குடி பகுதியில் அமைந்துள்ள கருணாலயா முதியோர் இல்லத்திற்கு அருகாமையில் பொதுக்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தினை தங்களுடைய அன்றாட பயன்பாட்டிற்கு அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அதிக அளவில் ஆகாயத்தாமரைகள்  மண்டி  உள்ளது. தற்பொழுது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தவித்து வரும் சூழலில், குளத்திலுள்ள நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகள் வெயில் காரணமாக அழுகி துர்நாற்றம் வீசும் நிலையில் அதனை அகற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியுள்ள இளைஞர்கள் ஆகாயத்தாமரைகளை குளத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ள நிலையில், தண்ணீர் வற்றிய பிறகு குளத்தை முறையாக தூர்வாரி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.