• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

900 கோயில்கள் கொண்ட உலகின் ஒரே அதிசய மலை!

Byதரணி

Oct 24, 2022

குஜராத் மாநிலத்தில் உள்ள பலிதானா என்ற இடத்தில் 900 கோயில்களைக் கொண்ட உலகின் ஒரே அதிசய மலையாக அமைந்திருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இந்த மலையானது ஷத்ருஞ்ஜய் மலை என்றழைக்கப்படுகிறது.

இந்த மலையின் மேல் சுமார் 900 ஆலயங்கள் அமைந்திருக்கிறது. ஆலயங்கள் அனைத்துமே சுமார் 900 ஆண்டுகள் முற்பட்டவை என்பதுதான் இதன் சிறப்பு. ஒரே இடத்தில் அமைந்த இந்த ஆலயங்களைப் பார்ப்பதற்காகவே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் சமாதி நிலை எய்தியாகக் கூறப்படுகிறது. மார்பிளினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை.

இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மலைக்கோவிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத் என்று கூறப்பட்டுள்ளது. ஆதிநாத்தின் சிலை 7 அடி உயரத்தில் நான்கு தலைகளுடன் காட்சியளிக்கிறது. இது 220 அடி உயரத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடவுளர்கள் அனைவரும் உறைய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவில் அனைத்துக் கடவுளர்களும் இங்கு உறங்குவதாகவும்ரூபவ் அதனால் கோயில் குருக்கள் இங்கு இரவு முழுதும் இருக்கவேண்டும் எனவும் ஐதீகம் உள்ளது. மோட்ஷம் வேண்டுவோரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பவும் இந்த கோயிலை ஒருமுறையாவது பக்தர்கள் தரிசிக்கவேண்டும் என்று ஜைன புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆதிநாத், குமர்பால், விமல்ஷா, சம்ப்ரதிராஜா, சௌமுக் ஆகியவை இங்குள்ள ஜைன மதக் கோயில்களில் சிலவாகும். இங்கு அமைந்துள்ள 900 கோயில்களும் 18கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பிலேயே அமைந்துள்ளதுதான் இதன் சிறப்பம்சமாகும். பலரும் நடந்தே செல்வதை பிரார்த்தனையாக வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் ரதம் மூலம் சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு கோயிலுக்குப் பின்னாலும் ஸ்தல புராணங்கள் உள்ளன. இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு செல்ல ரயில்ரூபவ் சாலை மற்றும் வான்வழி போக்குவரத்துகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.