மதுரை மேலூரிலிருந்து சென்ற அரசுப் பேருந்து ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் (அல்ட்ரா) கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், மாணவர்கள் மறித்தும் கண்டுகொள்ளாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதை கண்டித்து பேருந்தில் இருந்த ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் பயணி ஒருவர் சரமாரி கேள்விகள் எழுப்பினார். அதில், “உங்க வீட்டு பையன், இருந்தால் இப்படி விட்டுட்டு போவீங்களா? என அப்பயணி பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.