விருதுநகர் அருள் மிகு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக் கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 25 தேதி முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10- 30 மணிக்கு மேல் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் வழங்க பட்டது.நிறைவாக இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்யாண சாப்பாடு வழங்கப்பட்டது