• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திருமண அழைப்பிதழ்..!

Byவிஷா

May 24, 2023

2000 ரூபாய் நோட்டு வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் தேஜு. இவருக்கு 2019 ஆம் ஆண்டு திருமணமானது. அப்போது அவர் தனது திருமண அழைப்பிதழை 2000 நோட்டு வடிவில் அச்சிட்டு இருந்தார். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் அவர் தனது திருமண அழைப்பிதழை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த அழைப்புதல் தற்போது வைரலாகி வருகிறது. ரிசர்வ் வங்கி பெயர் அச்சிடப்பட்ட இடத்தில் லவ் பாங்க் ஆப் லைவ் என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒரு க்யூ ஆர் கோடும் இடம்பெற்றுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.