• Fri. Mar 29th, 2024

கடத்தல்காரர்களுக்கு வில்லன்…காவல்துறையே கண்டு வியக்கும் ரியல் ஹீரோ ..சிறப்பு பேட்டி

தமிழகத்தில் பல இடங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல் செய்திகளை நாம் படிப்பது உண்டு. பிறகு அதனை கடந்து மற்ற செய்திகளில் நமது மக்களின் நாட்டம் சென்றுவிடும். ஆனால் கடத்தல் கும்பல்களுக்கு பின்னால் உள்ள மாபியா, அதற்கு உள்ள டிமான்ட், இதனால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என ரேஷன் கடத்தலுக்கு பின்னால் இவ்வளவு திடுக்கிடும் தகவல்கள் உள்ளது என நம்மிடம் மனம் விட்டு பேச தொடங்கினார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல எஸ்.பி பாஸ்கரன். அவர் நமது அரசியல் டுடேக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல உண்மை சம்பவங்கள் வெளி வந்துள்ளன.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையின் கீழ் ரேஷன் அரிசிகள் கடத்தல் கும்பல்களை பிடிப்பது.போலி பெட்ரோல் , மூலிகை பெட்ரோல் , போலி மண்ணெண்ணெய் , கேஸ் மற்றும் பயோ டீசல் போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முன் இருந்த அரசு இது குறித்து பெரிதாக கவலைபட்டதாக தெரியவில்லை.ஆனால் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இது போன்ற குற்றசெயல்கள் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி , டிஜிபி ஆபாஸ் குமார் ஆகிய காட்டிய தீவிரத்தில் தற்போது காவல்துறைக்கே தண்ணீ காட்டும் அளவில் மதுரை மண்டலத்தை உள்ளடக்கிய 19 மாவட்டங்களில் கலக்கி வருகிறார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி.பாஸ்கரன்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல எஸ்.பி பாஸ்கரன்

பொது மக்களுக்கான அரிசி அவர்களிடம் தான் முறையாக கொண்டு சேர வேண்டும் அதனை சட்ட விரோதமாக பதுக்குவது, கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இவரது பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது. எந்த ஒரு மாவட்ட காவல்துறையையும் நம்பாமல் தன்கென்று ஒரு படை தனக்கென்று ஒரு வியூகம் கடத்தல்காரர்களை கொக்கி போட்டு தூக்குவதில் எஸ்.பி.பாஸ்கரன் கில்லாடி என்று தான் கூற வேண்டும்.

இவர் பொறுப்பேற்ற அதாவது 10.06.2021 முதல் 31.12.2021 வரை பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2173, அதே போல 19,480.89 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,86,59,748 மதிப்புள்ள பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் பயன்படுத்தபட்ட 426வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2292 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 19 குண்டாஸ். இவர் பொறுப்பேற்ப்பதற்கு முன் ஆறு மாதங்களில் ஒரு குண்டாஸ் கூட யார் மீதும் போடப்படவில்லை. அப்போது எல்லாம் கடத்தல் நடைபெறவில்லையா இல்லையென்றால் கடமைக்கு வண்டிகளை மட்டும் பறிமுதல் செய்வது , கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது போன்ற அரசியல்தலைகளின் தலையீடும் நடைபெற்றிருந்ததாக கூறுகின்றனர்.

அனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வரிடம் இருந்து அமைச்சர்களுக்கு வந்த நேரடி உத்தரவு அதிகாரிகளை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தக்கூடாது.அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.சட்டம் தன் கடமையை செய்யும் என்பது போல திமுகவினரே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. அதனை செயல்படுத்தும் விதத்தில் அமைச்சர் சக்கரபாணியால் இறக்கப்பட்ட வேங்கை தான் எஸ்.பி பாஸ்கரன்.

பெரும்பாலும் கடத்தப்படும் ரேஷன் அரிசிகள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு பாலீஷ் செய்து விற்பனை செய்யப்படுகிறது.நாமக்கல் பகுதியில் கோழிகளுக்கு தீவனமாகவும் இதனை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு கேரள எல்லைகளான திருநெல்வேலி , தூத்துக்குடி குழித்துறை , தென்காசி உத்தமபாளையம் போன்ற பகுதியில் தான் கடத்தல் அதிகம் நடப்பதாக எஸ்.பி.பாஸ்கரன் ஒரு வாரம் அங்கேயே இருந்து கடத்தல்காரர்களை தட்டி தூக்கியுள்ளனர். இந்த ஆபரேஷன் நடைபெறும் போது அமைச்சரே நேரடியாக எஸ்.பி.பாஸ்கரனின் செயலை கண்டு வியந்துள்ளார்.

அதன் பிறகு 19 மாவட்டத்திலும் வேட்டை ஆரம்பித்தது. மேலும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் எஸ்.பி.பாஸ்கரன் உத்தமபாளையத்தில் ஒரு கடத்தல் கும்பல் அரிசியை கடத்த உள்ளனர். இன்பார்மர் மூலம் தகவல் எஸ்.பி பாஸ்கரனிடம் வருகிறது.இப்படி இன்பார்மர் இருப்பது அவர் யார் என்பது கூட அவரது குழுவில் அவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. பிறகு போலீசார் மப்டியில் அங்கு டூவீலரில் சென்று நோட்டம் விடுகின்றனர். கடத்தல் நடக்க போகும் சம்பவம் உண்மை என்று தகவல் உறுதி செய்யப்படுகிறது. வண்டியை பின் தொடர்ந்து சரியான இடத்தில் வைத்து தனது மொத்த குழுவுடன் சேர்ந்து வண்டியை மடக்கி பிடிக்கிறார்.
அதன் பிறகு தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே அப்பகுதி இன்ஸ்பெக்டருக்கு தெரியவரும்.அப்படி அதிரடி காட்டுவதில் எஸ்.பி.பாஸ்கரன் ஸ்பெசலிஸ்ட். அதனால் இவர் ஒரு அதிகாரிக்கு போனில் அழைக்கிறார் என்றால் எங்கையோஎவனோ சிக்கிட்டான் என மொத்த காவல் நிலையமே அதிரும் அப்படி ஒன் மேன் ஆர்மியாக களத்தில் கடத்தல் காரர்கள் மட்டுமல்ல அனைத்து தகவல் தெரிந்தும் தப்பிக்க விடும் போலீசாரும் இவரை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

ரேஷன் அரிசியை கடத்தினால் தானே பிடிப்பார்கள் நேரடியாக நெல்களை கடத்தினால் எப்படி தெரியும் என்று விவசாயிகள் போர்வையில் நெல்களை கடத்த தொடங்கினர். உயர்நீதிமன்ற உத்தரவின் படி லாரிகளில் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் விவசாயிகளுடையதா அல்லது வியாபாரிகள் மூலம் எடுத்துச்செள்ளபடுகிறதா என்ற ஆய்வினை மேற்கொண்டார் குடிமைப்பொருள் வழங்கல்குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி.பாஸ்கரன். அப்படி நெல் மூட்டைகளை கொண்டு செல்லும் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி சில புதிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் அதன்படி ஆவணமில்லாத 11 லாரிகள், 650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களும் கைது செய்யப்பட்டனர். எஸ் .பி.பாஸ்கரனை பொறுத்தவரையில் அரசியல் தலைகளின் தலையீடுகள் எடுபடாது. அப்படி தலையீடு இருக்குமேயானால் அவரது நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும். இதுவரை எந்த ஒரு அரசியல்வாதிக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாத ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இவரது நடவடிக்கைகள் நேரடியாகவே அமைச்சர் கண்காணித்து கொண்டிருக்கிறார் அனைத்து தகவல்களும் அமைச்சர் மற்றும் டிஜிபியின் டேபிள்களுக்கு சென்று விடுகிறது.
இறுதியாக அவர் மக்களிடம் வைத்த கோரிக்கை இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் தான் திருந்த வேண்டும். ரேஷன் அரிசிகளை உண்பதை கேவலமாக எண்ணும் மனநிலையை கைவிட வேண்டும். அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து அரிசியை கொள்முதல் செய்து இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. ஆனால் நாம் அரிசி வெள்ளையாக இல்லை, தரம் இல்லை என்று அரிசியை வாங்கி விற்கிறோம். இதனை சிலர் பயன்படுத்திக்கொண்டு குழுக்களாக பிரிந்து அரிசிகளை வாங்கி மொத்தமாக கடத்துகின்றனர். ரேஷன் அரிசி இரண்டு முறை அவிக்கபடுவதால் தான் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.இன்னும் சொல்லவேண்டுமென்றால் பல இடங்களில்சேமிக்கப்பட்டு கடைசியாக ரேஷன் கடைகளில் வந்து நம் கைக்கும் கிடைக்கும் தூரம் அதிகம் என்பதால் புழு பூச்சி புடிக்ககூடாது என்பதற்காக தான் இரண்டு முறை அவிக்கபடுகிறது.இதில் தான் சத்துக்களும் அதிகம் உள்ளது.அரசு மக்களுக்கு செய்யும் நன்மைகளை மக்கள் உணர்ந்து செயலாற்றினால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றாமல் தவிர்க்கலாம் என்று அவர் கூறினார்.
நம்மிடம் பேசிக்கொண்டிருந்த போது நேற்று ஒரே நாளில் 31,380கிலோ அரிசி 658கிலோ கோதுமை 16,500கிலோ உடைத்த அரிசி நான்கு சக்கர வண்டிகள் 4, 3லாரிகள் 1ஆம்னி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் நம்மிடம் கூறிய போது நமக்கே அதிர்ச்சியாக இருந்தது.


காவல்துறையில் இது போன்று கண்ணுக்கு தெரியாமல் கடமையை சரியாக செய்யகூடிய மனிதர்கள் குறைவு. ஆனால் அவர்களை கண்டறிந்து அவர்களின் செயல்களையும் ,அவர்களையும் கவுரபடுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *