• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கிராம மக்கள் தொடர் போராட்டம் தீவிரம்

ByKalamegam Viswanathan

Nov 20, 2024

சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்னும் இரண்டு நாட்களில் கால அவகாசம் முடிய உள்ள நிலையில் போராட்டத்தை கிராம மக்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் சுமார் 633 17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராம மக்களின் சுமார் 146 வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அரசு கையகப் படுத்தப்பட்டது. இதற்கு உரிய தொகை வழங்கப்படாததால் இப்பகுதி கிராம மக்கள் தங்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 சென்ட் நிலம் அதில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அரசு பள்ளி நியாய விலை கடை ஆரம்ப சுகாதார நிலையம் நீர் தேக்க தொட்டி உள்ளிட்டவைகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு எங்கள் நிலங்களை விமான நிலையத்திற்காக எடுத்துக் கொள்ளவும் என கோரிக்கைகள் வைத்து தொடர்ந்து எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரிகள் ஊர் கிராம மக்களுக்கு கொடுத்த கால அவகாசம் முடிய உள்ள நிலையில் வருகின்ற சனிக்கிழமை அரசு அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்த வருகை தரலாம் என எதிர்பார்க்கப்பட்டோம் வருகிறது. இதற்காக இப்பகுதி மக்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக சனிக்கிழமை அன்று காலவாகசம் முடிவதால் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அதிகளவில் மக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த கிராம மக்களின் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் இயக்கத்தினர் வருகை தர கூடும் என்பதால் இங்கு மூங்கில் மரங்களைக் கொண்டு கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.