• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் குழந்தைகளின் கல்விக்கான ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

நவராத்திரி விழாவில் விஜயதசமியை முன்னிட்டு இன்று குழந்தைகளின் கல்விக்கான ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி ஓம்சக்தி கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள கோவிலில் ஓம்சக்தி சன்னிதானத்தில் குழந்தைகளின் நாவிலும் பச்சரிசியில் குழந்தைகளின் வீரல்களாலும் மஞ்சலைகொண்டு அரிசியிலும் எழுத்துகள் எழுதி ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.

நவராத்திரி விழாவில் பத்தாம் நாளான இறுதி விழாவான விஜயதசமி இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு முதல் முதலான கல்வி தொடங்கும் நாளாக அது ஓம்சக்தி கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று நாகர்கோவில் உள்ள ஓம்சக்தி சன்னிதானத்தில் அரிசியில் குழந்தைகளின் நாவிலும், பச்சரிசியில், குழந்தைகளின் வீரல்களாலும் எழுத்துகளை எழுதி ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் கல்வி அறிவில் அவர்கள் சிறப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.