• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பாம்பை விரட்ட முயன்று வீட்டை எரித்த சோகம்..!

Byமதி

Dec 5, 2021

நம்ப ஊருல எல்லாம் பாம்பைப் பார்த்தால் கம்பு, தடி, கல்லு போன்ற பொருட்களை வைத்துத்தான் அத அடிக்க இல்லையென்றால் விரட்ட முயற்சி செய்வோம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் பாம்பை விரட்ட முயற்சித்து பாம்பு போச்சோ இல்லையோ வீடே போச்சு…

அமெரிக்காவின் பூல்ஸ்வில்லே என்கிற பகுதியில் அதிக விஷம் கொண்ட பாம்புகள் நிறைந்துள்ளன. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பாம்பு ஒன்று ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்துவிட, அதை விரட்ட எண்ணிய அவர் புகையை பயன்படுத்தி பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த பகுதியில் எளிதில் பற்றிக்கொள்ள கூடிய வகையிலான பொருட்கள் இருந்ததை மறந்த அவர் நெருப்பு புகையை பயன்படுத்தியவுடன், சற்றும் எதிர்பாராதவகையில் வீட்டிலுள்ள பொருட்கள் மீது தீப்பற்றி, வீட்டின் கீழ்தளம் தொடங்கி சுவர்கள் என அனைத்திலும் தீப்பற்றி வீடு முழுவதும் எரிய தொடங்கியது.
இதனையடுத்து வீடு கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு ஒருவழியாக தீயை அணைத்தனர். இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை, வீட்டிற்குள் நுழைந்த அந்த பாம்பும் உயிருடன் இருந்துள்ளது. அதனை மீட்ட தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டுவிட்டனர். ஆனால் பாம்பை விரட்ட முயன்றவரின் வீடு எரிந்ததால், வீட்டின் உரிமையாளர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.