• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 121 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றின் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.


தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற ஒன்றிய சுகாதாரத்துறை தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 10 ஆம் தேதி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.


தற்போது தமிழ்நாட்டில், 120 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66 பேர் குணமடைந்ததாகவும், 2 பேர் கேரளாவிலும் 52 பேர் தமிழகத்திலும் சிக்கிசையில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதித்த 121 பேரில் 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.