• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பல்லடம் அருகே சுங்கச்சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டது

பல்லடம் அருகே நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடி கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவு தான் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் அவிநாசி முதல் அவிநாசி பாளையம் சாலை விரிவாக்க பணியானது கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் நீர் நிலைகளை ஆகிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடி அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதனை அகற்ற கோரிக்கை வைத்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பகுதியில் பதட்டமான சூழல் நிலவு தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.