• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அய்யன் திருவள்ளுவர் சிலை பாதத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு..,

நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், கன்னியாகுமரி நகர் மன்றத் தலைவர் குமரி எஸ். ஸ்டீபன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

முன்னதாக,கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை காலடியில் பேராசிரியர் முது முனைவர் பா. வளன்அரசு தலைமையில்,உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநில,மாவட்ட நிருவாகிகள் திருக்குறள் முற்றோதல், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், கன்னியாகுமரி குமரி வரலாற்றுக் கூடத்தில் நடைபெற்ற பதவிஏற்பு நிகழ்வில் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ் மற்றும் கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் குமரி எஸ். ஸ்டீபன் ஆகியோர் கலந்துகொண்டு, கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கவிஞானி ஞானமூர்த்தி, பொதுச் செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம், பொருளாளர் நல்லாசிரியர் பெ. சௌந்தரராஜன் ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா சம்பத், சிறப்புத் தலைவர் தென்னிலை இராம. கோவிந்தன் அமைப்புச் செயலாளர் வேளாண் பொறியாளர் காசிநாதன், தலைமைக் கரண ஆசான் பேராசிரியர் கருத்தப் பாண்டி, தலைமை நிலையச் செயலாளர்கள் முனைவர் க.சின்னத்துரை, சிவஞான பாண்டியன், துணைத் தலைவர்கள், சீனி. பழமலை, குறள் செல்வி பிச்சி, வெங்கடேசன் துணைப் பொதுச் செயலாளர்கள் முனைவர் இரா. வனிதா, முனைவர் திருமூர்த்தி, தலைமைத்துறை இயக்குனர்கள் மறைமலைநகர் ‌சரவணன், விழுப்புரம் ஜனசக்தி, மத்திய சென்னை இரமேஷ், செண்பகராஜ், சேலம் சிவபாலன், டாக்டர் கலைவேந்தன், தர்மபுரி மலர்வண்ணன், அரியலூர் செல்வேந்திரன், பெரம்பலூர் சோலைமுத்து,
ஆகியோர் பங்கேற்றனர்.

தேனி வீரசிகாமணி மற்றும் மாவட்ட நிருவாகிகளுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். கூட்டமைப்புத் தலைவர் கவிஞானி மு. ஞானமூர்த்தி அனைத்துப் பொறுப்பாளர்கள் சார்பாக ஏற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் பிச்சி ஆதிலிங்கம் குறள் வாழ்த்து பாடினார். பொதுச் செயலாளர் தங்க. ஆதிலிங்கம் வரவேற்புரையாற்றினார்.துணைப் பொது செயலாளர் ரெ. ராஜகோபால் நன்றியுரையாற்றினார்.

விழாவில் 255ஆவது திருக்குறள் அரசு திங்களிதழ், 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி, முன்னாள் தலைவர் முன்னாள் தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர் நினைவு நூல் ஆகியவை வெளியிடப்பட்டன.

கூட்டத்தில் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் வெ‌. சேகருக்கு கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது வழங்க வேண்டும். அண்மையில் குமரி மாவட்டம் வள்ளியாற்றின் படுகை அருகே செம்பவளம் ஆய்வுத் தளத்தில் தொல்லியல் கள ஆய்வாளர் பைசல் தலைமையிலான குழுவினரின் கள ஆய்வு மேற்கொண்டதில் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றனர். எனவே, தமிழகத் தொல்லியல் துறை குமரி மாவட்டத்தில் விரிவான அகழாய்வுப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைத்துறை இயக்குனர் தாகூர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் கவிஞர் முல்லைச் சொல்லத் துரை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கவிஞர் முகிலை பாசிறி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் சஜுவ் ஆகியோர் செய்து இருந்தனர்.

விழாவில் மாவட்ட தலைவர்கள் கடலூர் மேற்கு அருள் முருகன், குமரி மேற்கு புலவர் இரவீந்திரன், கள்ளக்குறிச்சி தங்கராசு, அரியலூர் நாகமுத்து, செங்கல்பட்டு ரெங்கராஜன், திருப்பத்தூர் சரவணன், கும்பகோணம் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.

குமரி ஆட்சியர் அழகு மீனா. உலகத் திருக்குறள் கூட்டமைப்பு உறுப்பினர்கள்
350_பேர். திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்ல சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு
மாவட்ட நிர்வாகம் மூலம் செய்த உதவியை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
பேராசிரியர் தங்க.ஆதிலிங்கம் நன்றியை தெரிவித்தார்.