• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல..,அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல என்றும் அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் என்றும் ஜெயலலிதா வாக்குப்படி அண்ணா திமுக நூறு ஆண்டுகள் வாழும், ஆளும் என்றும் விருதுநகரில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனை
புதிய நிர்வாகிகள் நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அண்ணா திமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவைச் மாநில செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, கழகத்திற்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கின்றனர். திடீரென வந்தவர்கள் திடீரென போய் விட்டார்கள். அண்ணா திமுக என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். கழகத்திற்கு 96ல் ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் வைஸ் சேர்மனாக வெற்றி பெற்றேன். சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல.

சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அண்ணா திமுக மீண்டும் எழும். இங்கிருந்தவர்கள் பலபேர் வேறு இடத்திற்கு சென்றிருப்பார்கள். பழத் தோட்டத்தை நாடி அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் தோட்டக்காரர்கள். நாம் நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தை பாதுகாக்க முடியும். பழங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆகையால் பழத்தோட்ட காரர்களாக நாம் இருப்போம். சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னார்கள்.

நூறு ஆண்டுகள் ஆனாலும் அண்ணா திமுக என்ற மாபெறும் இயக்கம் ஆளும் வாழும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு அடியையும் நாம் சிறப்பாக எடுத்து வைப்போம். பல தடவைகள் நாம் ஏமாந்து இருக்கலாம். இனிமேல் ஏமாற மாட்டோம். சோதனையான இந்த காலக்கட்டத்தில் நம்மோடு இருப்பவர்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். அண்ணா திமுக ஒவ்வொரு தொண்டனையும் வாழ வைத்திருக்கிறது.

அண்ணா திமுக மிகப்பெரிய ஆலமரம். ஆயிரம் பறவைகள் இளைப்பாற விழுது பெற்று இருக்கின்றது. பறவைகளுக்கும், ஆலமரத்திற்கு ம் அனைவரும் நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், அண்ணா தொழிற்சங்க மாநில பொருளாளர் அப்துஅமீது, விருதுநகர் மண்டல அண்ணா தொழிற்சங்கம் (போக்குவரத்து பிரிவு) செயலாளர் குருசாமி, பொருளாளர் பழனி, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் விஜயகுமார், விருதுநகர் நகரச் செயலாளர் முகம்மது நெயினார், விருதுநகர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி. முன்னாள் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The test is not new to ADMK-ADMK Saga Limited Movement Former Minister KD Rajendrapalaji Speech