தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் கிராமத்தில் உள்ள வடக்கு குளம் மற்றும் தெற்கு குளம் பகுதிகள் மற்றும் தரிசு நிலங்களில் 2000 பனை விதைகளை நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஓராண்டிற்க்குள் இந்தப் பகுதியை சுற்றியுள்ள நீர்நிலை கறைகளில் ஒரு லட்சம் பனைமர விதைகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்று நம்புகின்றனர்.
முன்னதாக கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பனை மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கிராமத்து இளைஞர்களும் முதியவர்களும் சமூக நல அமைப்பை சேர்ந்தவர்களும் விளக்கிக் கூறியதோடு பனை மரங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.