• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் பொன்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

ByKalamegam Viswanathan

Sep 28, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே, தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக,கள்ளர் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்திலும் முறைகேடு செய்து வருவதாக அதன் இணை இயக்குனர் பொன் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களில் முறைகேடு நடப்பதாகவும், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் பொன் குமார் மீது முறைகேடு புகாரில், சென்னை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் சம்பத் , விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவர் செய்த ஊழல் புகார்கள் உண்மையான கண்டறியப்பட்ட பின்பும் இதுவரை பொன் குமார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?எனவும், தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி அனைத்திலும் ஊழல் செய்யும் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் பொன் குமாரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், கள்ளர் சீரமைப்பில் பணி புரியும் ஆசிரியர்களையும் சங்கங்களையும் சாதி ரீதியாக தூண்டிவிட்டு அதன் மூலம் தான் செய்யும் ஊழல்களை மறைக்க முயற்சித்து வருகிறார்கள் எனவும், இதனால், கள்ளர் சீரமைப்பு துறையில் பதற்றமான சூழல் நிலவுகிறது எனவும், உடனடியாக பொன் குமார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என, தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.