• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

போதை பொருள் விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்ட சூப்பர்ஸ்டார்

இந்தி நடிகர் அக்க்ஷய் குமார் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அவர் மீது
கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்திநடிகர்களில்நடிகர் அக்சய் குமார் தனிமனித ஒழுக்கத்தில் சர்ச்சைக்குள்ளாகாதவர் கூத்தும் குடியுமாக மாலை நேரங்களில் களைகட்டும் இந்தி திரையுலகின் விழாக்களில் அக்க்ஷய்குமார் பங்கேற்பது இல்லை
உடல் ஆரோக்கியத்துக்கு நம்ம ஊர் நடிகர் சிவக்குமார் போன்று சக நடிகர் நடிகைகளுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்அதிகாலை 4 மணிக்கு தவறாமல் நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் உள்ளவர்.
புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பான் மசாலா பயன்படுத்துவது போன்ற பழக்கமும் அக்சய் குமாருக்கு கிடையாது. இதனை பல முறை அவரே தனது பேட்டிகளில் கூறியுள்ளார். தனது ரசிகர்களையும் இதுபோன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார். அந்த வகையில், நடிகர் அக்க்ஷய் குமாரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சிகரெட், மதுபான விளம்பரங்களிலும் அக்க்ஷய் குமார் நடித்ததில்லை. இதனால் அவர்மீது அளப்பரிய மரியாதையை ஏற்படுத்தி இருந்ததுஆனால், இத்தனை வருடங்களாக அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்கள் அனைத்தையும்
விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் அக்க்ஷய் குமார் நடித்ததின் மூலம் இழந்துவிட்டார் என்கின்றனர்
அந்த விளம்பரத்தில் அக்க்ஷசய் குமார் மட்டுமின்றி நடிகர்கள் ஷாருக் கானும், அஜய் தேவ்கானும் நடித்திருக்கின்றனர். ஒருசில தினங்களுக்கு முன்புதான் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது விளம்பரம் வெளியான நாளில் இருந்து நடிகர் அக்க்ஷய் குமாரை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், அவரை கடுமையாக ட்ரோலும் செய்து வருகின்றனர்.

“என்ன அக்ஷய் குமார்… பணத்துக்காக எதையும் செய்யும் சாதாரண மனிதன் தான் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்”
என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் செய்திருக்கிறார்.

“இதுவரை எங்களின் ஃபிட்னஸ் ஐகானாக உங்களை பார்த்து வந்தோம்; பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததன் மூலம் அந்த மதிப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள்” என பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, அக்க்ஷசய் குமாரின் புகைப்படங்களுடன் மீம்ஸ்களும், வீடியோ ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் அக்க்ஷய்குமார் பான்மசாலா விளம்பர படத்தில் நடித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த சில நாட்களாக உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினை என்னை பாதித்துள்ளது. இனி இதுமாதிரியான புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். அந்த நிறுவனத்துடனான எனது தொடர்பை முறித்துக் கொள்கிறேன். இந்த விளம்பரத்தின் மூலம் கிடைத்த பணத்தை வேறு ஏதேனும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த எண்ணி உள்ளேன். சட்டப்பூர்வ ஒப்பந்தப்படி அந்த விளம்பரம் அதற்குரிய காலம் வரை ஒளிபரப்பாகும். அதேசமயம் இனி எதிர்காலத்தில் எனது விளம்பர தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். அதற்கு பதிலாக நான் எப்போதும் உங்கள் அன்பையும், விருப்பத்தையும் கேட்கிறேன் எனக் கூறியுள்ளார்