மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பாக கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்க கோரியும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் கல்வி தகுதியை பட்டப் படிப்பு என மாற்றக் கோரியும், பணி ஆண்டை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்.

இந்த போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். வட்ட பொருளாளர் சுரேஷ் கண்ணன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் நயினார் முகமது போராட்டத்தை விளக்கி பேசினார். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






