கன்னியாகுமரி பகுதியில் உள்ள 300_க்கும் அதிகமான தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்க கோரி ஒரு நாள் அடையாள போராட்டம் தொடங்கியது.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு தந்தை அருட்பணி உபால்ட், பங்கு பேரவை துணைத் தலைவர் டாலர் டி ஓட்ட அறிவித்த போராட்டம் இன்று காலை (மே_21)காலை அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம் முற்றத்தில் தொடங்கியது.
நாகர்கோவில் மேயர் மகேஷ் போராட்டக்குழுவினரை சந்தித்து விரைவில் தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில். பங்கு தந்தை, பங்கு பேரவை உறுப்பினர்கள் அறிவித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி பங்கு பேரவை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக. கன்னியாகுமரி சட்டமன்றத் அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், பங்கு தந்தை அருட்பணி உபால்ட், பங்கு பேரவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவரது ஆதரவை தெரிவித்தார்.

இன்று தேவாலயம் முத்தத்தில் நடந்த போராட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் இட்டதோடு.இயற்க்கை,கடல் பாதிப்பு பற்றிய பாடல்களை பெண்கள் பாடினார்கள்.
அருட் தந்தை உபால்ட் கண்டன உரை ஆற்றினார். போராட்டம் பகுதியில் பாதுகாப்பு பணியில் காவலர்கள், கடலோர பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
மாலை 4_மணிவரை நடைபெற்ற போராட்டத்தின் முடிவில். பங்கு தந்தை உபால்ட் எங்கள் எதிர்ப்பு மற்றும் கோரிக்கையின் குரல் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என தெரிவித்தவர். எங்களின் நேர்மையான கோரிக்கை வெல்லும் என்ற
நம்பிக்கையை தெரிவித்தார்.








