கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட, அமராவதிவிளை செல்லும் சாலையில்,பள்ளிச் செல்லும் குழந்தைகள், பெண்கள், மற்றும் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்ற அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கேட்டு அமராவதிவிளை நான்காம் நாள் கஞ்சி காய்ச்சும் அறவழி வழி போராட்டம் ஆனது.

இன்று (20.11.2025) மருங்கூர் பேரூர் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் அவர்கள் மற்றும் மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி ஸ்ரீனிவாசன் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம்
அமராவதிவிளை சி. எஸ்.ஐ. சர்ச் பாதர் கிறிஸ்தராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இதற்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும், திறனற்ற திமுக அரசையும் கண்டித்து கண்டன உரையாற்றினார், இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அமராவதிவிளை பொதுமக்கள் திருளானோர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
