குமரி மாவட்ட சிறுபான்மையினரின் உரிமை மீட்பு போராட்டத்தில். தமிழக முதல்வருக்கும், குமரி மாவட்ட ஆட்சியருக்கும் போராட்டக்குழுவினர்
கோசங்கள் மூலம் வைத்த மூன்று கோரிக்கைகள்.

1) குமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் தேவாலயம் கட்ட தடை செய்யாதே மற்றும் வீடுகளில் நடக்கும் ஜெபக்கூட்டத்தை தடை செய்யாதே.
2) ஆசாரிபள்ளம் மருத்துவமனை வளாகத்தில் பிரிட்டிஷ் ஆளுமையின் போது
கட்டப்பட்ட100_ ஆண்டு பழமையான கிறிஸ்துவ சிற்றாலயத்தை திறந்து மீண்டும் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.
3) குமரியில் அரசு உதவிபெறும் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களின்
உரிமைகளை பறிக்காதே.

மீட்பு போராட்டத்தில் பங்கு பெற்ற சிறுபான்மை பிரிவினர்களுடன் , நாம் தமிழர் அமைப்பினர் பங்கேற்றனர். போராட்டத்தின் நிறைவில். போராட்டத்தில் நேரடியாக பங்கேற்காத அருட் பணி ஜார்ஜ் பொன்னையா தலைமையில் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றவரென்று ஞானதாசன், கூட்டமைப்பின் தலைவர் செல்வகுமாரன்,
மீரா மைதீன், டாக்டர் ஏசுதாசன் ஆகியோர் தக்கலை தாசில்தார் இடம் கோரிக்கை மனுவை கொடுத்த அருட்பணி ஜார்ஜ் பொன்னையா மக்களின் கோரிக்கையை
குமரி ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் பார்வைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்கள்.