• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியஸ் தரும் வலிமை! – திரை விமர்சனம்!

அஜித்குமார், கார்த்திகேயா, ஹூமா குரேஷி நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் இசையமைப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம், வலிமை!

வலிமை படம் திட்டமிட்டபடி இன்று உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளே வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், நடிகர் அஜித்தின் பர்ஃபார்மன்ஸ் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அஜித் அடிக்கடி பேசும் பஞ்ச் அட்வைஸ்கள் அனைத்துக்கும் தியேட்டர்களில் ஆரவாரம் ஆர்ப்பரிக்கிறது!

வலிமை திரைப்படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்! பைக் ஸ்டன்ட் காட்சிகள், வில்லன் கார்த்திகேயாவை முதல் பாதியில் கைது செய்து வைப்பது. அவரை விடுவிக்க அவரது பைக் ரேஸர் டீம் வருவது, அவர்களுக்கும் அஜித்துக்கும் இடையே நடக்கும் சண்டை என ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி உள்ளார் நடிகர் அஜித். படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்ட அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டது.

வில்லன் கேங்கில் இணைந்து கொண்டு அஜித்தின் தலையிலேயே தாக்கி விட்டு தப்பிச் செல்லும் தம்பியை நினைத்து சாப்பிடாமல், “குட்டி வரணும்”னு அடம் பிடிக்கும் அம்மாவை சமாதானப்படுத்த அஜித் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நெஞ்சை பிழிகின்றன.

வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களை ஒரு ஆப் மூலம் ஒன்றினைத்து அவர்களை சாத்தானின் அடிமைகளாக மாற்றி தனக்கு வேண்டிய தேவைகளையும் கடத்தல் தொழிலையும் செய்து வருகிறார் வில்லன் கார்த்திகேயா. அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் அருமை!

அந்த கேங்கில் வேலையில்லாமல் ஊதாரியாக சுற்றித் திரியும் அஜித் குமாரின் தம்பியும் மாட்டிக் கொள்கிறார். அடிமையாக சிக்கி சீரழிந்து கிடக்கும் பல தம்பிகளையும் காப்பாற்றி திருத்தும் அண்ணனாக அஜித் குமார் கிளைமேக்ஸில் நெஞ்சை நிமிர்த்துகிறார்.

இளைஞர்கள் டார்க் வெப் போன்ற மாய உலகில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் சூழலில் அம்மா அப்பா பாசம் எவ்வளவு முக்கியம் என்பதை வலிமை திரைப்படத்தின் மூலம் இயக்குநர் எச் வினோத் எடுத்து உரைத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் கொஞ்சம் லெந்தை குறைத்திருந்தால் இன்னமும் படம் அட்டகாசமாக இருந்திருக்கும் என்கிற கருத்து படம் பார்க்கும் அனைவருக்கும் தோன்றுகிறது.

அஜித் குமாரின் வலிமை திரைப்படம் பிளஸ் மற்றும் மைனஸ் காட்சிகள் நிறைந்தே காணப்படுகின்றன. ஆனாலும், வலிமை திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை ரசிகர்களுக்கு கொடுக்க தவறவில்லை. அக்‌ஷன் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளுக்காகவே படத்தை தாராளமாக பார்க்கலாம்.