சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து பணிமனைக்கு அருகிலுள்ள இடத்தில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுப்புறங்களில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளதுடன், சுகாதார பிரச்சனைகளும் உருவாக வாய்ப்பு உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் திடீரென இவ்வாறு கழிவுகள் குவிக்கப்படுவதால் பிள்ளைகளின் உடல்நலத்திற்கே பாதிப்பு ஏற்படலாம் எனவும், நகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.