• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம்..,உயர்நீதிமன்றம் கருத்து..!

Byவிஷா

Nov 11, 2023

விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டையை சேர்ந்த ஜீவகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இந்தியாவில் மற்ற பகுதிகளில் மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பயிர் காப்பீட்டுக்கான தொகையில் 1.5 முதல் 5மூ பணம் செலுத்தினால், மீத பணத்தை மத்திய மாநில அரசுகள் செலுத்தி பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
ஆனால், தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பயிர் காப்பீடு மூலம் ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இழப்பீடு தொகை கிடைக்கும். ஆனால் தற்போது வரை பயிர் காப்பீடு குறித்து அதன் டெண்டர் குறித்தும் தமிழக அரசு கூட்டம் நடத்தவில்லை. வரும் 2024ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான டெண்டரை இறுதி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு, விவசாயிகள் விவகாரத்தின் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம் என்று கூறினர். மேலும், தமிழகத்தில் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த விவசாய நிலம் தற்போது ஒருபோகம் தான் விளைகிறது. அரசின் திட்டம் மக்களுக்கு முறையாக போய் சேர வேண்டும். இதனை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினரர்.
தமிழகத்தில் பயிர் பருவ காலங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிவடைகிறது என்பது குறித்து கால அட்டவணையை மத்திய வேளாண் துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அவர் நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.