• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் -2 ‘ விவகாரத்தின் தீர்வு ?

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்கு செல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாகவும், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்குப் பிறகு, இந்தியன் -2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.