• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சமையலறையில் நுழைந்த பாம்பு..,

ByK Kaliraj

Feb 5, 2026

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 45) இவரது வீட்டின் சமையலறையில் பாம்பு நுழைந்து இருப்பதாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.