கோவையில் செய்த திடீர் கனமழை காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அதே வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது……

கோவையில் இன்று பிற்பகல் திடீர் கன மழை பெய்தது.அதன்படி கோவை காந்திபுரம் உக்கடம் பூ மார்க்கெட் ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி சிவானந்தா காலனி கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் உருவானது. மேலும் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதே போல் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்பட்ட சூழலில் சாக்கடை கால்வாய் நிறைந்து சாக்கடை நீரும் மழை நீருடன் தேங்கியதால் கரு நிறத்துடன் சேரும் சகதியுமாக தேங்கி காணப்பட்ட மழை நீரால் கடும் துர்நாற்றத்துடன் அப்பகுதி காணப்பட்டது . இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் சாக்கடை கழிவுடன் மழை நீரில் மிதந்தபடியே சென்றதால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.








