யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ட்ரோன் கேமிராக்களை கொண்டு யானையை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 40 பேர் கொண்ட குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் பேட்டி…
வனத்துறை விதித்துள்ள தடையால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் தொட்டபெட்டா காட்சி முனை….

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு இருந்த ஒற்றை ஆண் காட்டு யானை நேற்று மாலை உதகை தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் உள்ள வன பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இதனால் யானையை விரட்ட வனத்துறையினர் செய்வ தெரியாமல் தவித்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன கால்நடை மருத்துவர், யானை பாகன்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும யானையை விரட்ட முயன்ற போதும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் யானையின் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது. இதனால் தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கெளதம் செய்தியாளர்களிடம் பேசும் போது, தொட்டபெட்டா பகுதியில் சுற்றி திரியும் இளம் வயது கொண்ட ஆண் யானை என்றும், பார்லியார் பகுதியில் சுற்றி திரிந்த யானை என்று கூறினார்.
மேலும் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ட்ரோன் கேமிராக்களை கொண்டு யானையை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 40 பேர் கொண்ட குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் தேவைப்பட்டால் அதிகாரிகளிடம் உத்தரவு வந்த பின் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.