• Sat. May 11th, 2024

மதுரையில் பள்ளி மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

குழந்தை தொழிலாளர் உறுதிமொழி, முதியோர் நலன் உறுதிமொழி மற்றும் மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.ஒழுக்கம், கண்டிப்புதான் உங்கள் வாழ்வை மேம்படுத்தும்-பள்ளி தலைமையாசிரியர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான பாளையம்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் இன்று 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கண்ணன் தாளாளர் ரமேஷ் பாபு மற்றும் அனைத்து ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

மாணவர்களிடம் பேசிய தலைமை ஆசிரியர் ஜான் கண்ணன் கூறும்போது நமது பள்ளி ஒழுக்கத்திற்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்ற பள்ளி இப்பள்ளியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர் சேர்க்கை உள்ளது தேர்ச்சி விகிதமும் அதிகமாக உள்ளது மாணவர்கள் ஒழுக்கமும் கீழ்ப்படிதலும் அவசியம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் முதியோர் பாதுகாப்பு உறுதிமொழி ஆகியவை உங்களிடம் பெறப்பட்டது.


மாணவர்கள் 16 வயதுக்கு கீழ் கண்டிப்பாக அரசின் உத்தரவை மீறி பணி புரிய கூடாது என்பதற்காக குழந்தை தொழிலாளர் உறுதி மொழியும் முதியவர் பாதுகாப்பு உறுதிமொழி என்பது நமது பெற்றோர் மற்றும் உறவினர் அல்லது அருகில் உள்ளவர்கள் அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் அவர்களுக்கு உதவ வேண்டும் இதன் மூலம் சமூக நலன் பேணப்படும் மாணவர்களாகிய நீங்கள் எங்களது உறவினர்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் . பள்ளிக்கு வரும் செல்லக் குழந்தைகள வரவேற்கிறோம் என பள்ளி தலைமையாசிரியர் ஜான் கண்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *