உலகின் இசை என்ற தலைப்பில் தி சம்ஹிதா அகாடமி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், உலகின் இசை என்ற தலைப்பில், பல்வேறு நாட்டினரின் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
உலகின் இசை” (Rhythm of the world) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் திருமதி புஷ்பஜா கண்ணதாசன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவில் பள்ளியில் சிறந்து செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர்களது பெற்றோர்களை மேடைக்கு அழைத்து வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து “உலகின் இசை” என்ற இசை அடிப்படையில் வெவ்வேறு கலாச்சார நாடகம், மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் எல்.கே.ஜி.பயிலும் குழந்தைகள் முதலான சிறுவர் சிறுமிகள் பல்வேறு நாட்டினரின் கலாச்சார உடையணிந்து நடனம் ஆடினர். வண்ண ஆடைகள் அணிந்து மாணவ,மாணவிகள் நடத்திய இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழாவில் , ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.