தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜய்யுடன் புதிய கீதை, தொடர்ந்து ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்தூரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்தார். திருமணமாகி 7 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகமான இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் இளமை அழகுக்கு திரும்பியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.











; ?>)
; ?>)
; ?>)