• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நடந்தேறிய அகோரிகளின் காதல் திருமணம்!

Byமதி

Nov 22, 2021

திருச்சியை சேர்ந்த பிரபல அகோரி பாபா மணிகண்டன் தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை சேர்ந்த மணிகண்டன், காசிக்கு தனது இளம் வயதில் சென்றவர் அங்கேயே தங்கி சாமியார்களோடு சாமியாராக சில காலம் இருந்தார். அகோரிகளின் வாழ்க்கை முறை பிடித்து போய், சிவ பக்தனாக மாறி, அவர்களோடு சேர்ந்த அகோரி பயிற்சி எடுத்தார். காசியில் தங்கி இருந்து சில வருடங்களுக்கு முன் அகோரி ஆன மணிகண்டன் அதன்பின் மற்ற சில அகோரிகளோடு சேர்ந்து தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுடுகாட்டில் தங்கி இருந்தவர் திருச்சிக்கு இடம் பெயர்ந்து அங்கு தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டு இருந்தார். இரவில் அடிக்கடி இவர் சுடுகாட்டில் பூஜை செய்வது வழக்கம். சமீபத்தில் இவரின் சிஷ்யர் விபத்தில் பலியானார். இறந்து போன தனது சிஷ்யரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் விசித்திர பூஜை செய்தார். இது பெரிய அளவில் சமூக வளையதளங்களில் வைரலானது.

மேலும் அகோரி பாபா மணிகண்டன் திடீரென்று நள்ளிரவில் இதுபோன்று பூஜை நடத்துவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையிலும் அகோரி மணிகண்டன் நான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய பூஜை செய்வதாகவும், மக்களின் நலனுக்கா பூஜை செய்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று தனது சிஷ்யயை திருமணம் செய்து கொண்டார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார். பிரியங்கா மீது காதல் வயப்பட்ட சாமியார் கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம், அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர். உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.