• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

அமெரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றியது

ByA.Tamilselvan

Nov 17, 2022

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் பிரதநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது. இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் அதிபர் ஜோபைட னின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற 218 இடங்கள் தேவை. பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது. இதில் குடியரசு கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியது.